உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய்பாபா பிறந்த நாள் விழா

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய்பாபா பிறந்த நாள் விழா

புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், சாய்பாபாவின் 92 வது பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது. காலை 8:20 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின. சாய் பள்ளி மாணவ, மாணவிகளின் பேண்ட் இசை வாத்தியம், பஞ்சவாத்தியம் வாசிக்கப்பட்டது. பிரசாந்தி நிலைய இசைக்குழுவினர் பாடினர்.ஸ்ரீ சாய் மத்திய அறக்கட்டளையின் 2016 - 17 ம் ஆண்டின் அறிக்கையை, நிர்வாகி எஸ்.எஸ்.நாகானந்த் சமர்ப்பித்து, அறக்கட்டளை சேவைகள் குறித்து விவரித்தார். மற்றொரு நிர்வாகி வி.மோகன் எழுதிய, சத்ய சாய் பாபா லிவ்ஸ் ஆன் புத்தகம் வெளியிடப்பட்டது. அர்ஜென்டினா சாய் அறக்கட்டளை நிர்வாகி லியானார்டோ கட்டார், சாய்பாபா குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். என்னிடம் அர்ஜென்டினா பாஸ்போர்ட் இருந்தாலும், இந்தியன் தான் என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் கே.அனில் குமார், சாய் பாபா அவதாரம் குறித்து தெலுங்கில் விவரித்தார். சாய்பாபா பிறந்த நாள் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பஜனைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. பக்தர்களுக்கு தினமலர் சார்பில் கேசரி பாத், தண்ணீர் பாக்கெட் வழங்கப்பட்டது. புட்டபர்த்தி வாழ் தமிழர் நலச்சங்க தலைவர் லட்சுமி நாராயணன், விழா தலைவர் சாய் பாரதி, துணைத்தலைவர்கள் சிவகுமார், பீட்டர், பொதுச்செயலர் பாண்டியன், துணை செயலர் நாராயணன், பொருளாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் பக்தர்களுக்கு உப்புமா வழங்கினர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சாய்பாபா பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !