உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்

பழநி கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் அம்மன், சிவன், பார்வதி, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பழநி தைப்பூசவிழா நடைபெறும், பெரியநாயகியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குபின் மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி நவ.,20ல் கணபதிபூஜை, நவக்கிரக ேஹாமம் என தொடர்ந்து நவ.,24வரை ஆறுகால யாகபூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:30மணிக்கு பெரிய நாயகியம்மன், கைலாசநாதர், முத்துக்குமாரா சுவாமி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. பரிவார தெய்வங்களில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. காலை 7.15மணிக்கு மூலவர்களுக்கு அபிேஷகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு கைலாசநாதர், பெரியநாயகியம்மனுக்கும் மற்றும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் அம்மன், சிவன், பார்வதி, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இணை ஆணையர் செல்வராஜ், சென்னை இணை ஆணையர் அசோக், துணை ஆணையர் மேனகா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !