சோழவந்தான் ஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு விழா
ADDED :2895 days ago
சோழவந்தான், சோழவந்தான் வைகை ஆற்றில் ஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு விழா நடந்தது. முன்னதாக கோயிலில் இருந்து சுவாமி, செண்டை மேளம் முழங்க யானை ஊர்வலத்தில் முக்கிய வீதி வழியாக வைகைக்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சந்தனம், இளநீர் உட்பட 18 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதையடுத்து சுவாமிக்கு ஆறாட்டு விழா நடந்தது. கோயில் நிர்வாகிகள் சக்கரவர்த்தி, தனசேகர், சேகரன் ஏற்பாடுகளை செய்தனர்.