முத்தபுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2892 days ago
ஆத்துார் : ஆத்துாரில், முத்தபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் தென்பகுதி கிராமத்தில், பழமை வாய்ந்த, அங்கையர்கண்ணி உடனுறை முத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக சீரமைப்பின்றி காணப்பட்டது.திருபணிக்குழு மற்றும் கிராம மக்கள் சேர்ந்து, கோவிலை புனரமைத்தனர். தொடர்ந்து, 21ம் தேதி, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், முதல்கால யாக பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. கலசங்கள் புறப்பாடு முடிந்து, கோபுரத்திற்கு, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.முத்தபுரீஸ்வரர் சுவாமிக்கு, பரிவாஹ அபிஷேகம் மற்றும் மஹா அபிஷேகம் நடந்தது. ஆத்துார் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.