கண்ணப்ப நாயனார் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :2974 days ago
சிக்கல் சிக்கல் அருகே கீழமுந்தல் கிராமத்தில் சிவலிங்கத்திற்கு கண் வழங்கியகண்ணப்ப நாயனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த நவ. 23 அன்று கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை கணபதி ஹோமம், வருண சங்கல்ப பூஜை, பஞ்ச கவ்ய, கோ பூஜைகள் செய்யப்பட்டு, காலை 10:00 மணியளவில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.மூலவரான சிவபெருமான், சிவலிங்கம், கண்ணப்பநாயனார் ஆகியோர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அன்னதானம் நடந்தது. நிர்வாகிகள் சடமுனியன், கிராம தலைவர் கணேசன், வேல்சாமி, கோவிந்தன், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கீழமுந்தல் கிராம பொதுமக்கள், விழாக் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.