உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா கொடியேற்றம்

செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா கொடியேற்றம்

செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சி பீரங்கிமேடு அருணாசல ஈஸ்வரர் கோவிலில் வரும் டிச. 2ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உள்ளனர். இதற்கான விழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு காலையில், அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கொடி மரத்தின் கீழ் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் பூஜையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி கோவில் உலா நடக்க உள்ளது. டிச. 2 ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு மகா தீபமும் ஏற்ற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !