உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேக யாகபூஜை துவக்கம்

பழநி பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேக யாகபூஜை துவக்கம்

பழநி;பழநி அருகே பாலசமுத்திரம் அகோபிலவரதராஜப்பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை முதல் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

பழநி மலைக்கோயிலைச் சார்ந்த, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் பலநுாற்றாண்டுகள் பழமையானது இங்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உடனும், பெருந்தேவித்தாயார், ஆண்டாள், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், திருமங்கை ஆழ்வார் சன்னதிகள் உள்ளன. கடந்த 1996ல் மகாகும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் தற்போது ரூ.95 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்குபின் வருகின்ற நவ.,30ல் மகாகும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. கடந்த நவ.,8 ல் முகூர்த்தக்கால் நட்டு யாகசாலைகள் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் அமைக்கும்பணி நடக்கிறது. நாளை (நவ.,28ல்) கணபதிபூஜையுடன் முதல் கால யாகபூஜை துவங்கி தொடர்ந்து நவ.,30வரை யாகசாலைபூஜைகள் நடக்கிறது. அன்று காலை 10:15மணிக்கு கோபுரகலசங்களிலும், காலை10:35மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !