தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் சதய திருவிழா
ADDED :2888 days ago
தர்மபுரி: தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், கார்த்திகை சதய விழாவை முன்னிட்டு, கல்யாண காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கார்த்திகை சதய விழாவை முன்னிட்டு, தர்மபுரி கோட்டை மல்லி கார்ஜூனேஸ்வரர் கோவிலில், கடந்த, 26 முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை, திருமண ஆராட்டல் மற்றும் சீர்வரிசை அம்மனுக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு, மல்லிகார்ஜூனேஸ்வரர், கல்யாண காமாட்சி அம்மன் திருமணம் நடந்தது. இன்று காலை முளைப்பயிரு கரைத்தலும், மாலை, 6:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. நேற்று, கார்த்திகை, இரண்டாவது சோம வாரத்தை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும், 108 சங்காபி?ஷகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.