ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :3205 days ago
ஊட்டி : ஊட்டி அடுத்துள்ள எம்.பாலாடாவில் உள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜை சிறப்பாக நடக்கிறது. நடப்பு மாத பூஜையையொட்டி, முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்களின் பஜனை, ஆடல், பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.