திருவண்ணாமலை தீப திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா!
ADDED :2886 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஆறாம் நாள் 63 நாயன்மார்கள் மாட வீதியில் உலா வந்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஆறாம் நாள் காலை உற்சவத்தில் 63 நாயன்மார்களை பள்ளி மாணவர்கள் தோலில் சுமந்தபடி ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் மாட வீதி உலா வந்தனர். வெள்ளி யானை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.