அகோபிலவரதராஜப் பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :3206 days ago
பாலசமுத்திரம் பழநி அருகே பாலசமுத்திரம் அகோபிலவரதராஜப்பெருமாள் கோயில் நாளை (நவ.,30ல்)காலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. பழநி முருகன் கோயிலைச் சார்ந்த, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் பலநுாற்றாண்டுகள் பழமையானது. இக்கோயிலில் 1996ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது ரூ.95 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்குபின் நாளை(நவ.,30ல்) கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. நேற்று கணபதி பூஜையுடன் முதல் கால யாகபூஜை துவங்கி தொடர்ந்து நவ.,30வரை 4 யாகசாலைபூஜைகள் நடக்கிறது. அன்று காலை 10:15மணிக்கு கோபுரகலசங்களிலும், காலை10:35மணிக்கு மூலஸ்தான கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா செய்கின்றனர்.