உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்புதாளை சிவன் கோயிலில் பைரவர் சிலை கண்டெடுப்பு

நம்புதாளை சிவன் கோயிலில் பைரவர் சிலை கண்டெடுப்பு

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை சிவன் கோயிலில் பூமிக்கு அடியிலிருந்துபைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டது.இக் கோயில் கும்பாபிேஷகம் சில மாதங்களுக்கு முன்புநடந்தது. நேற்று முன்தினம் கோயில் பராமரிப்புக்காகவும், மரங்கள்நடுவதற்காகவும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, 5 அடி உயரமுள்ள தலையில்லாத பைரவர் கற்சிலை பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து அதேகிராமத்தை சேர்ந்த வாசு கூறியதாவது: இக் கோயில் 500 ஆண்டுகளுக்கு முன்புமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிேஷகம் நடத்துவதற்காக பூமியை தோண்டும் போது கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இக் கல்வெட்டு குறித்து தொல்பொருள் ஆய்வு துறைக்கு தகவல் தெரியப்படுத்தினோம். அவர்கள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் கல்வெட்டில் குறித்த தகவல்களை தெரியப்படுத்தவில்லை. தற்போது எடுக்கப்பட்ட பைரவர் சிலை மிகவும் அழகான சிலையாக உள்ளது. தலையில்லாததால் தரிசனம் செய்ய முடியாது. ஆகவே கோயில் ஓரத்தில் வைத்துள்ளோம். பைரவர் சிலையின் தலை பகுதியை தேடும்பணிகள் நடந்து வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !