பக்தர்கள் வசதிக்காக ’சேப் சபரிமலை’ செயலி அறிமுகம்
ADDED :2919 days ago
சபரிமலை: பக்தர்கள் வசதிக்காக ’சேப் சபரிமலை’ என்ற அலைபேசி செயலி (ஆப்)வசதியை கேரள போலீஸ் அறிமுகம் செய்துள்ளது. இதில் சபரிமலை தொடர்பான விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். பம்பையில் சக்கு பாலம், ஹில்டாப், திருவேணி ஆகிய இடங்களில் பார்க்கிங் இடவசதி, சன்னிதானத்தில் கூட்டம், தரிசனம் செய்ய ஆகும் நேரம் போன்ற தற்சமய விபரங்கள் கிடைக்கும். இதுபோல சபரிமலை பாதையில் உள்ள முக்கிய கோயில்கள், பெட்ரோல் பம்ப், ஏ.டி.எம்., மருத்துவமனைகள் போன்ற விபரங்களும் கிடைக்கும்.மேலும் பம்பை, சன்னிதானத்தில் பக்தர்கள் தவற விடும் பொருட்கள் விபரங்களும் இதில் தெரியவரும்.’இவை எந்த போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு நேரில் வந்து பெறமு டியும்’என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.