1800 அடி உயர மருத்துவாழ் மலையில் 2ம் தேதி கார்த்திகை மகாதீபம்
ADDED :2883 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே அமைந்துள்ள மருத்துவாழ் மலையில் வரும் 2-ம் தேதி கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. கன்னியாகுமரி அருகே பொத்தையடியில் கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்தில் மருத்துவாழ் மலை உள்ளது. இங்கு அரியவகை மூலிகைகள் உள்ளன. இங்கு பராமர்த்தலிங்க சுவாமி கோயில் உள்ளது. வரும் இரண்டாம் தேதி காலை முதல் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் அன்று இரவு 8:00 மணிக்கு தேவி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.