கண்ணகி கோயிலை சீரமைக்கக் கோரி மனு
ADDED :2883 days ago
சென்னை: ’கண்ணகி கோயிலை சீரமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சமூக ஆர்வலர், நர்மதா நந்தகுமார், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகம் - கேரளா எல்லையில், கண்ணகி கோயில் அமைந்துள்ளது. அப்பகுதியை, கேரளா ஆக்கிரமித்து வருகிறது. கண்ணகி கோயிலுக்கு செல்ல, தமிழக அரசு சார்பில், சாலை அமைக்கப்படவில்லை.கேரள அரசு அமைத்துள்ள சாலை வழியே செல்ல வேண்டி உள்ளது. கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளதால், கோயிலை சீரமைக்கவும், சாலை வசதி ஏற்படுத்தவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.