சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2888 days ago
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே, சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. ஜலகண்டாபுரம் அடுத்த, சூரப்பள்ளி சிவசக்தி நகர், சக்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம், கடந்த, 22ல், முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், காவிரியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை, பக்தர்கள் தீர்த்தக்குடங்களில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். நேற்று அதிகாலை நடந்த, இரண்டாம்கால யாகபூஜையை தொடர்ந்து, 7:45 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.