மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா
முருங்கப்பட்டி: சேலம், பெத்தாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட, மகா கணபதி மற்றும் கட்டேரியப்பசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெத்தாம்பட்டி ஊர்மக்கள் சார்பில், புதிதாக மகாகணபதி மற்றும் குலதெய்வமான கட்டேரியப்ப சுவாமிக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த, 29ல் கணபதி யாகத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், கஞ்சமலை சித்தர்கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்து மூலவர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, புனிதநீர் வைக்கப்பட்டிருந்த கலசங்களுடன் கோவிலை வலம் வந்து மகாகணபதி கோவில், கட்டேரியப்பசுவாமி கோவில்களின் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபி?ஷகத்தை, கஞ்சமலை சித்தேஸ்வரசசுவாமி கோவில் அர்ச்சகர்கள், சங்கர கிருஷ்ண சிவாச்சாரியார், சந்திரமவுலீஸ்வரன் சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தனர். முருங்கப்பட்டி, நல்லா கவுண்டனூர், சித்தர்கோவில், இளம்பிள்ளை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.