உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மகாதீபம் புதுச்சேரி வானொலியில் ஒலிபரப்பு

திருவண்ணாமலை மகாதீபம் புதுச்சேரி வானொலியில் ஒலிபரப்பு

புதுச்சேரி: திருவண்ணாமலை மகாதீப நேர்முக வர்ணனை, புதுச்சேரி வானொலியில் இன்று ஒலிபரப்பாகிறது. இது குறித்து புதுச்சேரி வானொலி நிலைய உதவி இயக்குனர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவண்ணாமலையில் இன்று 2ம் தேதி மாலை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. 2,268 அடி உயரம் கொண்ட மலையின் மீது ஏற்றப்படும் மகாதீபம் குறித்த நேர்முக வர்ண னையை, புதுச்சேரி வானொலி நிலையம், திருவண்ணாமலை கோவிலிலிருந்து நேரடியாக மாலை 5.15 மணிக்கு ஒலிபரப்பு செய்ய உள்ளது. முனைவர்கள் ரமணன், சுந்தரராமன் ஆகியோர் வர்ணனை செய்ய உள்ளனர். இந்த நிகழ்ச்சி புதுச்சேரி, காரைக்கால், மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களின் முதன்மை அலைவரிசைகளிலும், புதுச்சேரி வானொலி எப்.எம்., பண்பலை அலைவரிசையி லும் நேரடியாக ஒலிபரப் பாகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !