உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சமயபுரத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சமயபுரத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குமாரபாளையம் அடுத்த, கம்பன் நகர், சமயபுரத்து மாரியம்மன், பால விநாயகர், பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 29 மாலை, பவானி காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. 30ல், சீர்வரிசை எடுத்து வருதல், கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, இரண்டாம் கால யாக வேள்வி, நேற்று காலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபி?ஷகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை, சேலம் உத்தமசோழபுரம் பாலசுப்ரமணிய சிவம் சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தினர். ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !