ராமேஸ்வரம் கோயிலில் சொக்கப்பனை எரிப்பு
ADDED :2900 days ago
ராமேஸ்வரம்:கார்த்திகை தீப விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கார்த்திக்கை தீப விழா யொட்டி நேற்று, ராமேஸ்வரம் திருக்கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.இதன் பின் சுவாமி, அம்மன் சன்னதி எதிரே அமைக்கப்பட்ட சொக்கப்பனைக்கு தீயிட்டு எரித்தனர். விழாவில் கோயில் இணை ஆணையர்மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைசெல்வம்,கமலநாதன் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்து, கொண்டாடினர்.