உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம்

கரூர் மாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம்

கரூர்: கரூர் அடுத்த, நொய்யல் சேமங்கி மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. பின், மண்டல அபிஷேக பூஜைகள் நடந்தன. இதில், நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உட்பட, 17 வகையான திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !