சிவன் மலையில் கார்த்திகை தீபம்: பரவசமடைந்த பக்தர்கள்
ADDED :2989 days ago
கூடலுார்:கூடலுார் நம்பாலகோட்டை சிவன் மலையில் ஏற்றப்பட்ட மகா கார்த்திகை தீபத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கூடலுார் நம்பாலகோட்டை சிவன்மலை, சிவன் கோவிலில் மகா கார்த்திகை தீப திருவிழா நடந்தது. மாலை 4:00 மணிக்கு கிரிவலம் துவங்கியது. கோவில் மற்றும் மலையை சுற்றி வந்து, நிறைவடைந்தது. மாலை, 6:00 மணிக்கு நீலகிரி சற்குரு ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி குருசுயம் ஜோதி, கார்த்திகை மகா தீபத்தை ஏற்றினார். கூடியிருந்த பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, சிவன்மலை வளர்ச்சி சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.