உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 360 தீர்த்தங்கள்

360 தீர்த்தங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், காலபைரவர் சன்னதி எதிரில் பிரம்மதீர்த்தம் ஆகியவை உள்ளன. மலையில் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம், அல்லிச்சுனை, அரளிச்சுனை, இடுக்குச்சுனை, வலக்கையால் பாறையைப் பிடித்து இடக்கையால் மட்டுமே நீர் அருந்தும் ஒறட்டுக்கை சுனை (ஒறட்டு என்றால் இடது), தவழ்ந்து சென்று நீர் குடிக்கும் புகுந்து குடிச்சான் சுனை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. அடிஅண்ணாமலை அருகில் பொங்கு மடு, துர்க்கை அம்மன் கோயில் அருகில்  கட்க  தீர்த்தம், ரமணாஸ்ரமம் அருகில் சிம்ம தீர்த்தம் உட்பட 360  தீர்த்தங்கள், மலையை ச்சுற்றி வரும் பகுதியில் உள்ளன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !