கரபுரநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
ADDED :2885 days ago
உத்தமசோழபுரம்: உலக நன்மை வேண்டி, கரபுரநாதர் கோவிலில், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மூன்றாவது திங்களையொட்டி, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், நேற்று, கரபுரநாதருக்கு, 1,008 சங்காபிஷேகம், பெரியநாயகி அம்பாளுக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. இதற்காக, தனித்தனியாக சிவலிங்கம், ஸ்ரீசக்கர வடிவில், சங்குகள் அலங்கரித்து வைத்திருந்தனர். உலக நன்மை வேண்டி நடந்த சங்காபிஷேகத்தையொட்டி, ருத்ர ஜபம், யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின், 1,008 சங்குகளில் உள்ள புனிதநீரால் மூலவர், 108 சங்கு புனிதநீரை, பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி, மூலவருக்கு தங்க கவசம், பெரியநாயகிக்கு வெள்ளி கவசம் சார்த்தப்பட்டிருந்தது.