ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ருத்ர ஹோமம்
ADDED :2885 days ago
ஈரோடு: உலக நன்மைக்காக, ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ருத்ர யாகம் நேற்று நடந்தது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சிவபெருமான் பெருமைகளை சொல்லியும், சிவ பெருமானின், 28 ஆகம தத்துவங்களை கூறியும், 64 மூலிகைகளை யாகத்தில் ஆகுதி செய்தும் யாகம் நடந்தது. இதனால் உலக நன்மை, நாட்டு மக்களுக்கு நலன், பருவத்திற்கேற்ப மழைப் பொழிவு கிடைக்கும் என யாக புராணத்தில் கூறப்பட்டுள்ளதாக, யாகத்தில் ஈடுபட்ட, சிதம்பரத்தை சேர்ந்த தீட்சதர்கள் கூறினர். கோவில் அலுவலர் முத்துசாமி, சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.