உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பண்ணசாமி கோவில் விழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்

கருப்பண்ணசாமி கோவில் விழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதி, கருப்பண்ணசாமி கோவில், 36வது ஆண்டு பொங்கல் விழா கடந்த, டிச., 1ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று தீர்த்த ஊர்வலம், அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கருங்கல்பாளையம் காவிரியாற்றில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். வேண்டுதல் வைத்து விரதமிருந்த பக்தர்கள், மயில் தோகை வேல் அலகு, முதுகு வாள் அலகு, வேல் அலகு குத்தி வந்தனர். காவிரிக்கரை செக்போஸ்ட், வாய்க்கால் பாலம் வழியாக, தீர்த்த ஊர்வலம் கோவிலில் முடிந்தது. ஈரோடு, கருங்கல்பாளையம், பள்ளிபாளையம் வண்டியூரான் கோவில் வீதிகளை சேர்ந்த மக்கள், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !