உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேக பூஜை

உடுமலை கோவிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேக பூஜை

உடுமலை: உடுமலை கோவிலில், கார்த்திகை மாத மூன்றாம் வார சங்காபிஷேக பூஜை நடந்தது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதத்தையொட்டி, திங்கட் கிழமைகளில் சங்காபிஷேக பூஜை நடக்கிறது. மூன்றாம் வாரமாக நேற்று, சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடந்தது.காலை, 9:00 மணிக்கு, கலசபூஜையுடன் துவங்கியது. காலை, 10:00 மணிக்கு, அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. காலை, 11:00 மணிக்கு, 108 வலம்புரி சங்குகளுக்கும் சங்காபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காசி விஸ்வநாதருக்கு, சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !