உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் தீவிர சுகாதார பணி

சபரிமலையில் தீவிர சுகாதார பணி

சபரிமலை: சபரிமலை ஓட்டல்களில் சுகாதாரம் பேணி காக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சபரிமலை ஓட்டல்கள் மற்றும் அன்னதான மண்டபத்தில் உணவு தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பரிமாறும் தொழிலாளர்கள் சுத்தமாக இருக்க வேண்டியது குறித்து, அதிகாரிகள் வகுப்புகள் நடத்தினர். உணவு பரிமாறும் போது கையுறை அணிய வேண்டும், உணவு பொருட்களை மூடி வைக்க வேண்டும், தகுதியற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது, கெட்டுப் போன பொருட்களை கொட்டி விட வேண்டும் போன்ற பல விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டது. ஓட்டல் பணியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இதுபோல சன்னிதான சுற்றுப்புறங்களை துாய்மையாக வைக்கஅதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தேவையற்ற பொருட்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகிறது. மாலை நேரத்தில் கொசு ஒழிப்பு புகை அடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !