உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

பெ.நா.பாளையம்;துடியலுார் அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது.துடியலுார் அருகே தடாகம் பாப்பநாயக்கன்பாளையத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் புதியதாக நிர்மாணம் செய்யப்பட்டு, கும்பாபிேஷக விழா நடந்தது. விழாவையொட்டி தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி ஊர்வலம், யாக சாலை பிரவேசம், ேஹாமம், திருமஞ்சனம், அலங்காரம் நடந்தன. கும்பாபிேஷக விழாவையொட்டி, காலை ேஹாமம், திவ்யபிரபந்தம், நாடி சந்தானத்தையடுத்து, காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. பக்தி சொற்பொழிவு, அன்னதானம், பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியவையும் நடந்தன. சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்துார், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !