உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பாஞ்சராத்ர தீபம்

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பாஞ்சராத்ர தீபம்

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பாஞ்சராத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகையன்று அனைத்து சிவன், முருகன், அம்மன் கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏகாந்த சேவையில் அலங்காரமாகி வீதிவலம் வந்தார். தொடர்ந்து கோயில் முன்புறம் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !