உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இறைச்சி கடை; பக்தர்கள் எச்சரிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இறைச்சி கடை; பக்தர்கள் எச்சரிக்கை

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் - பாசூர் சாலையில் வாரச்சந்தை அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. அப்பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக வழிபடுகின்றனர். சில ஆண்டாக அப்பகுதியை சேர்ந்த கதிர்வேல் பெரியசாமி கூட்டாக மாவு மில் இறைச்சி கடைகளை கோவிலுக்கு முன் நடத்துகின்றனர். கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்க தீபம் ஏற்ற டையூறாக உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் புனரமைப்பு வேலை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவில் நிலத்தை மீட்டுத் தருமாறு மொடக்குறிச்சி தாசில்தார் மாசிலாமணி பஞ்சாயத்து செயலரிடம் மனு தந்தனர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை. வி.ஏ.ஓ. பாலு ருபக்கமும் பிரச்னைகளை தூண்டி விடுகிறார். மக்களுக்கு பொதுவாக உள்ள கோவில் நிலத்தை மீட்டுத்தர அதிகாரிகள் தாமதித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோவில் குழு உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !