உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவகிரகங்கள் அடிப்படையில் சனி பகவான் கோவிலில் மரக்கன்றுகள் நட்டு வழிபாடு

நவகிரகங்கள் அடிப்படையில் சனி பகவான் கோவிலில் மரக்கன்றுகள் நட்டு வழிபாடு

கரூர்: கரூர் மந்திர சனீஸ்வர பகவான் கோவிலில் நவகிரகங்கள் அடிப்படையில் மரக்கன்றுகள் நடும் விழா நடப்பதாக சதுரகிரி மூலிகை மரசித்தர் சிவமுனியசாமி தெரிவித்தார். துகுறித்து கரூரில் அவர் மேலும் கூறியதாவது: நவகிரகங்களின் பெயர்ச்சி காரணமாகவே ஒருவரது வாழ்வில் ஏற்ற றக்கம் ஏற்படுகிறது. எனவே நவகிரகங்களின் அடிப்படையில் மரக் கன்றுகளை வழிபடுவது பலன் தரும். தமிழகம் முழுவதும் 153 கோவில்களில் நவகிரகங்கள் அடிப்படையில் மரக்கன்றுகள் நட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கரூர் அருகே அமராவதி ஆற்றுப் பகுதியில் உள்ள மந்திர சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 19ல் மரக்கன்றுகள் நடப்படுகிறது. சூரியன் - வில்வமரம் சந்திரன் - சந்தன மரம் செவ்வாய் - செம்மரம் ராகு - ராஜலிங்க மரம் குரு - மலைவேம்பு மரம் சனி - வில்வமரம் புதன் - மகிழ மரம் கேது - சிவப்பு மந்தாரை மற்றும் சுக்கிரனுக்கு செண்பக மரம் உகந்ததாகும். ந்த மரக்கன்றுகள் நடப்பட்டு சனிப் பெயர்ச்சி நாளில் ஹோமம் கலச பூஜையுடன் மஹா யாகம் நடத்தப்படுகிறது. கரூர் தொழிற்பேட்டையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ராசி நட்சத்திரம் அடிப்படையில் மரக்கன்றுகள் நடும் பணி விரைவில் துவங்க உள்ளது. வ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !