பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2867 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. கருங்காலிப்பட்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள சீத்தாராமர், காயத்ரிதேவி ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. மகா சங்கல்பம், தனபூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தியும், இதனை தொடர்ந்து நேற்று காலை மகா கும்ப ஆராதனம், சாற்றுமுறை, கும்பம் புறப்பாடும் நடந்தது. பின் 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், வளவனுார் கண்ணன் பட்டர், பண்ருட்டி பனபாபாக்கம் யோகேஷ், பாலாஜி ஆன்மீக சேவா சங்க துணை நிர்வாகி முகுந்தன் ஆகியோர் யாகசாலை பிரதான பூஜைகள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.