சபரிமலையில் சேவை செய்ய விருப்பமுள்ளோருக்கு அழைப்பு
ஈரோடு: சபரிமலையில் சேவை செய்ய, ஐந்து மற்றும் ஆறாம் குழு புறப்பட உள்ளது. இக் குழுவில் பணியாற்ற விரும்புவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அகில பாரத ஐயப்பா சேவா சங்க, ஈரோடு மாவட்ட தொண்டர்படை தளபதி அய்யப்பன் கூறியதாவது: சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனையொட்டி, ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரியாத்திரை வருகின்றனர். இவர்களுக்கு, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதிகளில், அன்னதானம், ஸ்டெச்சர், ஆக்ஸிஜன் பார்லர் ஆகியவற்றில், 11 நாட்கள் தங்கியிருந்து, சேவை செய்ய நான்கு குழுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்று சேவை செய்து திரும்பிவிட்டனர். ஐந்து மற்றும் ஆறாம் குழுவில் செல்ல விருப்பம் உள்ளவர்கள், வரும், 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விருப்பம் உள்ளவர்கள், 89734- 05331, 75987- 45551 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.