மயிலம் கோவிலில் திருவாதிரை வழிபாடு
ADDED :2866 days ago
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் திவாதிரை நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில், நேற்று முன்தினம் திவாதிரை நட்சத்திரத்ததை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, நடந்தது. இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தருக்கு மகா அபிஷேகம், வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவருக்கு பூஜைகள் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்ட சுவாமிகள் செய்திருந்தார்.