உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இதய சிகிச்சை: சபரிமலையில் நவீன கருவிகள்

இதய சிகிச்சை: சபரிமலையில் நவீன கருவிகள்

சபரிமலை: சபரிமலையில் இதயநோய் சிகிச்சை அளிக்க நவீன கருவிகள் வரவழைக் கப்பட்டுள்ளன. சபரிமலை கோவிலுக்கு மலையேறி வரும் பக்தர்களில் இதயம் தொடர்பான சிகிச்சை பெறுபவர்கள், டாக்டர் களின் ஆலோசனை பெற்று வர வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சீசனில் பம்பை முதல் சன்னிதானம் வரை, நான்கு அவசர சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வந்தன. இந்த ஆண்டு, அது, 15 ஆக அதிகரிக்கப்பட்டது. அனைத்து மையங் களிலும், தலா, 4 ஊழியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மலை ஏறும் போது உடல் தளர்ச்சி போன்ற அசாதாரண நிலை வருவதாக தோன்றினால் பக்தர்கள் இந்த மையத்தின் உதவியை நாடலாம். நின்று போன இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் அதிநவீன, ஏ.இ.டி., என்ற, ’ஆட்டோமேட்டிக் எக்ஸடெர்னல் டிபெபிலேட்டர்’ என்ற கருவி, சன்னிதானம் சகாஸ் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் இங்கு, 30 பேருக்கு இதய நோய் சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !