மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் மக்கள் பக்தி பரவசம்
ADDED :2862 days ago
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில், பொங்கல் விழா, நேற்று காலை வெகு விமர்சையாக நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு மாரியம்மனை வழிபட்டனர். இரவு, 9:00 மணிக்கு மேல், கம்பம் பிடுங்கப்பட்டு, நொய்யல் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதிலும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.