சபரிமலை சேவை: மாணவர்கள் புறப்பாடு
ADDED :2861 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சபரிமலை சேவைக்கு புறப்பட்ட மாணவர்களை, வழியனுப்பும் விழா நடந்தது. குமாரபாளையம், நாராயண நகர் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், ஆண்டுதோறும், சபரிமலை வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக, கல்லூரி மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். அதன்படி, இந்தாண்டு, சபரிமலைக்கு புறப்பட்ட மாணவர்களை வழியனுப்பும் விழா, அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னுசாமி, மாவட்ட செயலர் ஜெகதீஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். திருச்செங்கோடு, தனியார் கல்லூரியைச் சேர்ந்த, 25 மாணவர்கள் செல்கின்றனர். அங்கு நடந்து கொள்ள வேண்டிய வழிமுறை குறித்து விளக்கப்பட்டது. மூத்த நிர்வாகிகள் கேசவமூர்த்தி, மணிகண்டன் உள்ளிட்ட பலர், மாணவர்களை வாழ்த்தினர்.