உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோவில் திருவிழா: தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

பகவதியம்மன் கோவில் திருவிழா: தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

குளித்தலை: பகவதியம்மன் கோவில் திருவிழாவில், பால் குடம் எடுத்து, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம், குளித்தலை பாரதி நகரில், பகவதியம்மன்கோவில் திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, அப்பகுதி மக்கள், கடம்பர்கோவில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக் குடம், பால் குடம் எடுத்து வந்தனர். நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு, பெற்றோர் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை தூக்கிச் சென்றனர். திருவிழாவையொட்டி, பகவதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !