திருமலை தேவஸ்தான கோவிலில் தலித் அர்ச்சகர்கள்
ADDED :2959 days ago
திருப்பதி: திருமலை தேவஸ்தான கோவில்களில், தலித்துகளை அர்ச்சகர்களாக நியமிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருமலை தேவஸ்தானம், தலித்துகள், பின்தங்கிய வகுப்பினர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்த, அவர்கள் வசிக்கும் பகுதியில், 500 இடங்களில், ஏழுமலையான் கோவில்களை கட்டி வருகிறது. அக்கோவில்களில், தலித்துகளை அர்ச்சகர்களாக நியமிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்காக, திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவனில், அர்ச்சகர் பயிற்சி பட்டறையை தேவஸ்தானம் துவங்கியது. இதில் விருப்பம் உள்ள தலித் இளைஞர்கள், தங்கி அர்ச்சகர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் சிறப்பாக செயல்படுவோரை, தேவஸ்தான அர்ச்சகர்களாக நியமிக்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.