உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: வந்துட்டுதய்யா 7 1/2 வந்துட்டுதய்யா

மகரம்: வந்துட்டுதய்யா 7 1/2 வந்துட்டுதய்யா

துணிவே துணை என்று செயலாற்றி வரும் மகர ராசி அன்பர்களே!

சனிபகவான் இதுவரை 11-ம் இடத்தில் இருந்து  நன்மை தந்தார். தொழில் மூலம் சிறப்பாக வருமானம் பெற்றிருக்கலாம்.  பொன், பொருள் என வாங்கி இருப்பீர்கள். இப்போது சனிபகவான் 12-ம் இடமான தனுசு ராசிக்கு வருகிறார். இனி நற்பலனை எதிர்பார்க்க முடியாது.  உங்களுக்கு ஏழரைச்சனி ஆரம்ப காலம்.  சனி 12-ம் இடத்தில் இருக்கும்போது பொருளாதார இழப்பு வரலாம்.  எதிரி இடையூறு அவ்வப்போது வரலாம்.  சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும், சனியின் 7-ம் இடத்து பார்வை மூலம் பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவரை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். முயற்சிக்கேற்ப வாழ்வில் முன்னேற்றம் காணலாம். மற்ற முக்கிய கிரகங்களான குரு, ராகு, -கேதுவும் அவ்வப்போது நன்மை தருவர்.

குருபகவான் 10-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பானதல்ல. பொருள் நஷ்டம், மன சஞ்சலத்தை ஏற்படுத்துவார். குருவின் 5-ம் இடத்துப் பார்வை  மூலம் எந்த இடையூறையும்  உடைத்தெறிவீர்கள்.  அவர் 2018 பிப்.14-ல் 11-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.  அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கவும் வாய்ப்புண்டு.

ராகு தற்போது 7-ம் இடமான கடகத்தில்  இருக்கிறார். இது  சிறப்பான இடம் அல்ல. இங்கு அவரால் அவப்பெயரை சந்திக்க நேரலாம். கேது உங்கள் ராசியில் இருப்பதும் சிறப்பானது அல்ல.  அவரால் முயற்சியில் தடை, உடல் உபாதை ஏற்படலாம்.  ஆனாலும் போதுமான பணவரவு இருக்கும்.  

2018 ஜனவரி – 2019 பிப்ரவரி குரு சாதகமாக இல்லை என்பதால் தடை வந்தாலும், அதை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். ஆனால் 2018 பிப்.14க்கு பிறகு குருவால் சிறப்பான நிலையை காணலாம். பெண்களால் பொன், பொருள் சேரும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.  சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்,- மனைவி இடையே இணக்கம் உண்டாகும்.  பிள்ளைகளால் பெருமை காணலாம். குரு பகவான் 2018 ஏப். 9- முதல் 2018 செப். 3-வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் பொருள் நஷ்டம், மன சஞ்சலம் உண்டாகும். அவரது 5-ம் இடத்துப் பார்வையால் பிரச்னையை சமாளிக்கும் துணிச்சல் பிறக்கும். குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்கும். பகைவரின் சதி உங்களிடம் எடுபடாது.

தொழில், வியாபாரத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். அரசு வகையில் சோதனைக்கு ஆளாகலாம். வரவு, செலவு கணக்கை சரியாக வைப்பது நல்லது. 2018 பிப்.14 க்கு பிறகு  வருமானம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். புதிய வியாபார முயற்சியில் ஓரளவு பலன் கிடைக்கும்.  குருபகவானின் வக்ரகாலத்தில் எதிரி வகையில் கவனமாக இருப்பது நல்லது.

பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். 2018 பிப்.14க்கு பிறகு வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. குருபகவானின் வக்ரகாலத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதற்காக சற்று சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். 2018 பிப். 14க்கு பிறகு நிலைமை சீராகும்.  

அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள், பிரதிபலன் எதிர் பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். 2018 பிப்.14க்கு பிறகு கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். குருபகவான் 2018 ஏப். 9- முதல் 2018
செப். 3- வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறும் போது கவனம் தேவை.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சலும், ஆதாயமும் கிடைக்கும். கால்நடை வகையில் லாபம் அதிகரிக்கும்.  சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.  

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். குருவின் 5-ம் இடத்து பார்வையால் ஓரளவு நன்மை கிடைக்கும்.  2018 பிப்.14க்கு பிறகு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் 9-ம் இடத்து பார்வை மூலம்  சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  குருபகவானின்  வக்ரகாலத்தில் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியி ருக்கும். கேதுவால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

2019 மார்ச் – 2020 மார்ச் உங்கள் ராசியில் கேது இருந்ததால் உடல் உபாதை, அரசு வகையில் பிரச்னை தந்திருப்பார்.  இப்போது கேது  ராசிக்கு 12-ம் இடத்திற்கு போகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவ்வப்போது பணவிரயம் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட தடைகள் விலகும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். குரு பகவானின்  வக்ர காலத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். பணிரீதியான வீண் அலைச்சல் இருக்காது. சிலருக்கு பாராட்டு, விருது  கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்கள் தடையின்றி தொழிலில் முன்னேறுவர்.
அரசியல்வாதிகள், பொது நலசேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர்.  மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு செயல்படுவது நல்லது. குரு பகவானின் வக்ரகாலத்தில் கல்வி வளர்ச்சி உண்டாகும்.  

விவசாயிகள்  எள், கரும்பு, உளுந்து மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் வருமானம் பெறலாம். வழக்கு விவகாரத்தில் திருப்தியான முடிவு கிடைக்கும்.  

பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.

2020 ஏப்ரல் – டிசம்பர் குருபகவானின் பார்வை பலத்தால் தேவை நிறைவேறும். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.  தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம்.  வேலை இன்றி இருப்பவர்கள் மனைவி அல்லது குடும்பத்தினரின் பெயரில் தொழில் ஆரம்பிப்பது நல்லது. பணியாளர்கள் வேலை பளு இருக்கத்தான் செய்யும்.

குருபகவான் விருச்சிகத்தில் இருப்பதால்  நன்மை உண்டாகாது. இருந்தாலும் 2020 ஜூலை 7- முதல் அக்.14- வரை வக்ரம் அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த கால கட்டத்தில்  நன்மை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  வாகன வகையில் இனிய அனுபவம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் சற்று முயற்சி  எடுத்தால் மட்டுமே படிப்பில் சிறக்க முடியும்.  விவசாயிகளுக்கு நெல், கோதுமை, கொண்டை கடலை, கேழ்வரகு போன்ற தானியம் மூலம் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் முடிவு கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் விட்டுக் கொடுப்பது அவசியம்.  வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.  சகோதர வழியில் உதவி கிடைக்கும்.  உடல்நிலை திருப்தியளிக்கும்.

பரிகாரப்பாடல்

செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும்
எழில்மேனித் திருவே வேலை
அங்கணுலகு இருள் துரக்கும் அவர் கதிராய்
வெண் மதியாய் அமரர் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளை நீ அவனன்றோ மல்லல் வளம்
சிறந்தோங்கி இருப்பதம்மா!

பரிகாரம்

● வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு குங்கும அர்ச்சனை
● வளர்பிறை சஷ்டிநாளில் முருகன் வழிபாடு
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !