விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :2864 days ago
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமி என்பதால், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்பட்டன. பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்திபரவசத்துடன் கால பைரவரை வழிபட்டனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலும், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.