மேல்மலையனூர் அருகே கால பைரவர் வழிபாடு
ADDED :2962 days ago
செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் வழிபாடு நடந்தது. மேல்மலையனுார் அருகே உள்ள கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாரதனை நடந்தது. இதில் கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.