உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிேஷகம் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 1008 சங்காபிேஷகம் நடந்தது. சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலில் கார்த்திகை தீபங்கள் ஏற்றபட்டது. தேவஸ்தான செயல்அலுவலர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாயல்குடி: மாரியூரில் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயில் உள்ளது. கார்த்திகை நிறைவு சோமவாரத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணியளவில் 108 சங்காபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. வலம்புரி, இடம்புரி சங்கில் பால் நிரப்பப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. சிவநாம அர்ச்சனை, பாராயணம், நாமாவளியினை பக்தர்கள் பாடினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !