போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3184 days ago
போடி : போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் கார்த்திகை திங்கள் கிழமையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சி கோயில் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் பாஸ்கரன், துணைத்தலைவர் அசோக்குமார், துணை செயலாளர் காந்தி முன்னிலை வகித்தனர். யாக பூஜைகள், தீர்த்தம் நிரப்பப்பட்ட 108 சங்குகள் மூலம் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரங்களை சேகர் சாஸ்திரிகள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.