உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவிலில் 1,008 மஹா சங்காபிஷேகம்

வேதகிரீஸ்வரர் கோவிலில் 1,008 மஹா சங்காபிஷேகம்

திருக்கழுக்குன்றம்: -திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை, வேதகிரீஸ்வரர் கோவிலில், நேற்று, 1,008 மஹா சங்காபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற சிவஸ்தலமாக வேதகிரீஸ்வரர் கோவில், மலை மீது, 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. புஷ்ப அலங்காரம் இங்குள்ள சங்கு தீர்த்தகுளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறப்பதுடன், குரு பகவான் கன்னி ராசிக்கு வரும் காலத்தில் புஷ்கர மேளாவும் நடைபெறுகிறது. இம்மலைக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில், 1,008 சங்குகளை கொண்டு, மூலவர் வேதகிரீஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு மலைக்கோவிலில் நேற்று சங்கு தீர்த்த குளத்தில் தோன்றிய சங்குகளுடன், 1,008 சங்குகள், டிரேக்களில் வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. பின், யாகசாலை பூஜையுடன், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சங்குகளில் உள்ள புனிதநீரை, மூலவருக்கு சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வ.உ.சி.,தெருவில், காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, சங்காபிஷேகவிழா, நேற்று, துவங்கியது. காலை 6:00 மணிக்கு, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, காலை 9:00 மணி முதல் 1:௦௦ மணிவரை, சுவாமிக்கு, 1,008 சங்கங்கள் ரோஜா பூக்களால் அல்காரம் செய்யப்பட்டிருந்து. அதன்பின், சிறப்பு யாகம் மற்றும் ஏகாம்பரேஸ்வருக்கு, 1008 சங்க அபிஷேகம்நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !