உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை அரவணை தயாரிப்பில் பின்னடைவு

சபரிமலை அரவணை தயாரிப்பில் பின்னடைவு

சபரிமலை: நவ.,16ல் தேதி தொடங்கிய மண்டல கால பூஜையின் 25-ம் நாளில் கோயில் வருமானம் 101.08 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 15.12 கோடி ரூபாய் அதிகம். கடந்த ஆண்டு இதே நாளில் வருமானம் 85.96 கோடி ரூபாய்.

வருமான விபரம்: அரவணை- ரூ.44.77 கோடி, காணிக்கை- ரூ. 35.85 கோடி, அப்பம்- ரூ. 7.90 கோடி. டிராக்டர்கள் ஓட்டுவதில் கேரள உயர்நீதி மன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் சன்னிதானத்துக்கு சர்க்கரை வரத்து குறைந்துள்ளது. அரவணை தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !