கோட்டீஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :2866 days ago
செஞ்சி: பெருவளூர் மேல்மலையனூர் அருகே உள்ள பெருவளுர் கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் நேற்று காணிக்கை எண்ணிக்கை பணி நடந்தது. இதில் பக்தர்கள், 11 ஆயிரத்து 634 ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கோவில் மேலாளர் மணி, ஆய்வாளர் அன்பழகன், முன்னாள் தலைவர் ராதிகா ரேணுகோபால், திருப்பணி குழு தலைவர் ஜம்புலிங்கம், கணபதி குருக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.