உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பறவை அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பறவை அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கொடுமுடி: ஏமகண்டனூர், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கொடுமுடி அருகே, ஏமகண்டனூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 5ல், பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி, காவிரி ஆற்றங்கரையில் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பறவை, வேல் உள்ளிட்ட அலகு குத்தி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். காவிரி ஆற்றில் இருந்து ஊர்வலமாக சென்று, கோவில் வந்தடைந்தனர். தொடர்ந்து கிடா வெட்டுதல், பொங்கல் மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, 10:00 மணி முதல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !