பசுவப்பட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :2870 days ago
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, பசுவப்பட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த மாதம், 29ல் தொடங்கியது. டிச.,6ல் கம்பம் நடப்பட்டது. அன்று முதல் நாள்தோறும், பூவோடு எடுக்கும் விழா நடந்தது. பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி கம்பத்தை வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு, மாவிளக்கு ஊர்வலம், பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, எருமை கிடாய் பலி தரப்பட்டது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், நேற்று காலை நடந்தது. பசுவபட்டி, பூச்காட்டுவலசு, குன்னாங்காட்டுவலசு, வெங்கமேடு, கந்தசாமிபாளையம் பகுதி மக்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். பலர், நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிட்டனர். மஞ்சள் நீராட்டத்துடன், விழா இன்று நிறைவடைகிறது.